For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல்... ரஜினி கண்டனம்!

சென்னையில் ஐபிஎல்லுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல்- வீடியோ

    சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடந்த போராட்டத்தின் போது, காவலர்கள் மீது தாக்குதல் நடந்த காட்சிகள் வெளியாகின. இந்த சம்பவத்தை கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் நேற்று சேப்பக்கம் மைதானம் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Rajinikanth condemns attack against police

    இந்நிலையில் போலீசார் மீதான தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் சீருடையில் பணியாற்றுபவர்களை தாக்குபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல், சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என்றும், ரஜினி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். வன்முறை கலாச்சாரத்தை கிள்ளி எறியவில்லை என்றால் பேராபத்து என்றும் நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.

    English summary
    Actor Rajinikanth condemns attacks against police yesterday at Chennai annasalai protest which was against ipl match.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X