அரசியலுக்கு வீரம் மட்டும் போதாது... வியூகம் வேண்டும்... ரஜினி #RajiniFansMeet

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிகாந்தின் பரபரப்பு பேச்சு வீடியோ

சென்னை : அரசியலுக்கு வீரம் மட்டும் போதாது , வியூகம் வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்களை சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இன்று 2-ஆவது முறையாக மேலும் 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் சந்தித்து வருகிறார்.

Rajinikanth explains his political entry

அப்போது ரஜினி கூறுகையில், காலா பட தாமதமத்தால் ரசிகர்கள் சந்திப்பு தாமதம் ஆனது. ஹீரோவாக வேண்டும் என நினைத்து பார்த்தது இல்லை.

ரசிகர்களை சந்திக்கும் நல்ல நேரம் தற்போது வந்துள்ளது. என்னை ஹீரோவாக்கிய கலைஞானம் என்னிடம் கால்ஷீட் கேட்டது இல்லை.

ரஜினிகாந்த் ஸ்டைல் என்பதை உருவாக்கியவர் இயக்குநர் மகேந்திரன். என் நடிப்பில் இன்னொரு அம்சத்தைக் கொண்டு வந்தவர் இயக்குநர் மகேந்திரன். பின்னால் பேசும் பேச்சுகள்தான் மனதில் நிற்கின்றன.

எனது அரசியல் பிரவேசம் குறித்து ஊடகங்களுக்கு மிகவும் ஆர்வம் அதிகமாகிவிட்டன. போர் வந்தால் வருவேனு சொன்னேனே போர் வந்துவிட்டதா.

யுத்தத்துக்கு போனால் ஜெயிக்க வேண்டும். வீரம் மட்டும் போதாது வியூகம் வேண்டும். அரசியலுக்கு நான் புதிதல்ல. பிறந்த நாளன்று வீட்டில் இல்லாததற்கு வருந்துகிறேன் என்று ரஜினி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth met fans club in his Ragavendra Kalyana Mandapam. He says that brave only is not important for politics, one more thing strategy is needed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற