ராஜ்குமார் விடுதலையில் ரஜினி என்ன செய்தார்?
Recommended Video

சென்னை: ராஜ்குமார் விடுதலையில் ரஜினிகாந்தும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இதையடுத்து அவர் சத்தியமங்கலம் காட்டில் பிடித்து வைத்திருந்தனர்.
கடத்தப்பட்ட பின்னர் அவரை விடுவிப்பதற்காக தமிழக அரசால் தூதுவராக நக்கீரன் கோபால் அனுப்பப்பட்டார். அவரிடம் ராஜ்குமார் நலமாக இருப்பதாக அவர் பேசிய ஆடியோ கேசட்டை கூட்டாளிகள் கொடுத்தனுப்பினர்.

5ஆவது கேசட்
அதை அவர் தமிழக அரசிடம் ஒப்படைத்தார். ராஜ்குமாரை விடுவிக்க பல்வேறு கோரிக்கைகளை வீரப்பன் முன்வைத்தார். இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பேசிய 5-ஆவது கேசட் நக்கீரன் நிருபர் வாயிலாக சென்னை வந்தடைந்தது.

ரஜினி பேச்சு
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் ரஜினிகாந்த் மிக அதிகமாக ஆர்வம் காட்டியிருந்தார். ராஜ்குமார் விடுதலை தொடர்பாக முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து பலமுறை ரஜினி பேசியுள்ளார்.

சென்டிமென்ட்
தான் காட்டுக்குக் கூட போகத் தயார் என அறிவித்திருந்தார் ரஜினி. ஆனால் வீரப்பன், ரஜினி வருவதை விரும்பவில்லை. இறுதியாக ரஜினிகாந்தை வீரப்பனிடம் விட்டு எப்படியோ பேசவைத்தனர். அப்போது ரஜினி வீரப்பனிடம் சென்டிமென்ட்டலாக பேசியதாக தெரிகிறது. இது குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியே வரவில்லை.

பதற்றம் நிலவியது
இதைத் தொடர்ந்து 108 நாட்கள் கழித்து நவம்பர் மாதம் ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தார். இதனால் இரு மாநிலங்களிலும் நிலவி வந்த பதற்றம் சீரானது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications