ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்கியது ரஜினி- ரசிகர்கள் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடனான ரஜினி சந்திப்பு தொடங்கியது.

  கடந்த மே மாதத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்தபோது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

  Rajinikanth's fans club meeting started

  இதன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் உறுதியானது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கட்சிக் கொடி, பெயர் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ரஜினி செய்து வந்திருந்தார்.

  இந்நிலையில் இன்று முதல் 6 நாள்களுக்கு ரசிகர்களை இரண்டாவது முறையாக சந்திக்கிறார். இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

  இன்று முதல் 31-ஆம் தேதி வரை அவர் சந்திக்கிறார். தினமும் ஆயிரம் ரசிகர்கள் வீதம் சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியை இயக்குநர் கலைஞானம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

  கலைஞானத்தைத் தொடர்ந்து இயக்குநர் மகேந்திரன் பேசினார். ரசிகர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ரஜினி ஏதேனும் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth started his fans club meeting in his Ragavendra Thirumana mandapam. First day he will meet 5 Districts fans.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற