2.0 ரிலீஸ் தள்ளி போகிறது.... தமிழ் புத்தாண்டுக்கு வருகிறார் "காலா"

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழ் புத்தாண்டுக்கு வருகிறார் 'காலா'- வீடியோ

  சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு ஷங்கரின் 2.0 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகளால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போகிறது. அதற்குப் பதிலாக ரஜினி நடித்த காலா கரிகாலன் திரைப்படம் வெளியாகிறது.

  ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரோபோ திரைப்படம் வெறும் வெற்றியை பெற்று தந்தது. இதையடுத்து 2.0 என்ற படத்தை ஷங்கர் இயக்கினார். அப்படம் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் மட்டும் இருப்பதால் ரஜினி அடுத்த படத்தில் நடித்தார்.

  Rajinikanth's Kaala film to be released on April 14

  பா ரஞ்சித் இயக்கத்தில் காலா கரிகாலன் என்ற படத்தில் மும்பை தாதா போல் நடித்த ரஜினியின் புகைப்படங்கள் பர்ஸ்ட் லுக்கில் வைரலாகின. இந்நிலையில் இரு படங்களும் முடிவடைந்ததால் ரசிகர்கள் ரிலீஸ் தேதிக்காக எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

  இந்நிலையில் 2.0 படம் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதியும், அதற்கு பிறகு இரு மாதங்கள் கழித்து காலா படமும் வெளியிடப்படும் என்று ரஜினி தரப்பில் சொல்லப்பட்டது. இதையே ரஜினி கடந்த டிசம்பரில் நடந்த ரசிகர்கள் சந்திப்பிலும் தெரிவித்தார்.

  இதை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் 2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் மிச்சம் இருப்பதால் ஏப். 14-ஆம் தேதி வெளியாக சாத்தியம் இல்லை என்று ஷங்கர் தரப்பு கூறிவிட்டது. இதனால் பா ரஞ்சித்தின் காலா படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth's Kaala film to be relased on April 14. On that day Shankar told 2.0 will be released, but due to some technical works, its release postponed.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற