For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை.. கட்சிகள் பீதி கிளப்புகின்றன.. ரஜினி சொல்கிறார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து

    சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    சென்னையில் இன்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது:

    என்பிஆர் ரொம்ப அவசியம். முக்கியம். 2010ல் காங்கிரஸ் இப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்துள்ளனர். 2015ல் செய்தனர். யார் வெளிநாட்டுக்காரர், யார் உள்நாட்டுக்காரர் என தெரியவேண்டாமா? எனவே அது ரொம்ப அவசியம். மற்றவர்களுக்கு அதனால் என்ன பாதிப்பு என்பதுதான் புரியவில்லை.

    சிஏஏ பாதிப்பு இல்லை

    சிஏஏ பாதிப்பு இல்லை

    என்சிஆர் கொண்டுவர இன்னும் யோசித்து வருகிறார்கள். அதுபற்றிய டிராப்ட் தெரிந்த பிறகுதான் நமக்கு புரியும். சிஏஏ சட்டத்தால், இந்தியாவாழும் மக்களுக்கு பாதிப்பு இல்லை என தெளிவாக சொல்லிவிட்டனர். பக்கத்து நாடுகளில் இருந்து வருவோருக்கு குடியுரிமை கொடுப்பதா வேண்டாமா என்பதுதான் பிரச்சினை. முஸ்லீம்களுக்கு பெரிய அச்சுறுத்தல் என பீதி கிளப்பிவிட்டனர்.

    அதிகாரிகளுக்கே தெரியும்.. அவர்களிடம் கேளுங்கள்.. வருமான வரி பற்றிய கேள்விக்கு ரஜினி சொன்ன பதில்!அதிகாரிகளுக்கே தெரியும்.. அவர்களிடம் கேளுங்கள்.. வருமான வரி பற்றிய கேள்விக்கு ரஜினி சொன்ன பதில்!

    மண்ணின் மக்கள்

    மண்ணின் மக்கள்

    முஸ்லீம்களுக்கு எப்படி அச்சுறுத்தல்? இஸ்லாமி மக்களுக்கு இந்த நாட்டில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதுன்னா, சுதந்திரத்திற்கு பிறகு, பல முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு போனார்கள். ஆனால் இதுதான் நமது மண் என வாழ்வோர் இங்குள்ள முஸ்லீம்கள். இதுதான் எங்கள் ஜென்ம பூமி என வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை எப்படி இந்த நாட்டை விட்டு வெளியே அனுப்புவார்கள்? அப்படி வந்தால் நான் நிற்பேன், அவர்களுக்கு ஆதரவாக முதலில் வருவேன்.

    மத குருக்கள்

    மத குருக்கள்

    அரசியல் கட்சிகள் முஸ்லீம்கள் மத்தியில் பீதி கிளப்பி தூண்டி வருகிறார்கள். மதகுருக்களும் துணை போகிறார்கள். மாணவர்கள், தீர ஆராய்ந்து உங்கள் பேராசிரியர் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு போராடுங்கள். அல்லது அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்துவார்கள். போராடுகிறீர்கள். எந்த போலீஸ்காரர் எப்படி என தெரியாது. உங்கள் மீது எப்ஐஆர் போட்டால் வாழ்க்கையே போய்விடும்.

    இலங்கை தமிழர்

    இலங்கை தமிழர்

    இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்க வேண்டும் என்றுதான் எனது விருப்பம். இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கு வந்து வாழ்வோருக்கு இந்த குடியுரிமை அவசியம். ஆனால், சோழர் காலத்திலிருந்து இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து உள்ளனர். அங்கு வாழும், அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என கேட்க வேண்டாம். அவர்கள் அங்கேயே இருக்கட்டும்.

    நேர்மை

    நேர்மை

    நான் ஒரு நேர்மையான வரிகட்டுபவர். இதைப் பற்றி எந்த ஆடிட்டரிடமும் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். வட்டிக்கு பணம் கொடுத்துள்ளதாக வருமான வரித்துறையிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு ரஜினிகாந்த் இவ்வாறு பதிலளித்தார்.

    English summary
    Rajinikanth says CAA is not Anti Muslim law, and NPR is essential to find Indians.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X