சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்தார்.
இதனால் காலை முதலே சென்னை போயஸ்கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அரசியலுக்கு வருவது உறுதி
இந்நிலையில் இன்று கூறியபடியே தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. அதாவது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அவர் கூறினார்.

234 தொகுதிகளிலும் போட்டி
மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் ரஜினி அறிவித்துள்ளார்.

ஆன்மிக அரசியலை முன்னெடுப்பேன்
சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார். காலம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரசியல் கெட்டுப்போய்விட்டது
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சரியான நேரத்தில் கட்சி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். நாட்டில் அரசியல் கெட்டுப்போய்விட்டது என்றும் ஜனநாயகம் கெட்டுப்போய்விட்டது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

உற்சாகத்தில் ரசிகர்கள்
20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!