வடை போச்சே... பெரியார் சிலை விவகாரத்தில் காணாமல் போனதே நம்ம பேச்சு... அதிர்ச்சியில் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெரியார் சிலை விவகாரத்தில் காணாமல் போன ரஜினியின் பேச்சு- வீடியோ

  சென்னை: தந்தை பெரியார் சிலை விவகாரத்தில் தம்முடைய அரசியல் பேச்சு எடுபடாமல் போனதால் ரஜினிகாந்த் தரப்பு ரொம்பவே அதிர்ந்து போயுள்ளதாம்.

  மதுரவாயிலில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினி, ' இந்தியாவில் மிகப் பெரிய எழுத்தாளர், பேச்சாளரான கருணாநிதியையே 13 ஆண்டுகாலம் ஒதுக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். நல்லாட்சியைத் தந்தவர் அவர். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை என்னால் நிரப்ப முடியும்' எனப் பேசினார்.

  எம்ஜிஆர் குறித்து திடீர் பேச்சு

  எம்ஜிஆர் குறித்து திடீர் பேச்சு

  இதற்குப் பதில் அளித்த தினகரன், அரசியலில் நீடிக்கவே எம்.ஜி.ஆர். பற்றி ரஜினி பேசி வருகிறார். ரஜினிகாந்த் கூறியுள்ள வெற்றிடத்தை தேர்தலுக்கு பின்னர் மக்கள் நிரப்புவார்கள். 1975-க்கு பிறகு எம்.ஜி.ஆர். பற்றி பேசாத ரஜினிகாந்த், 33 ஆண்டுக்கு பிறகு இப்போது பேசி வருகிறார்' எனக் குறிப்பிட்டார்.

  ரஜினியின் ஆலோசனை

  ரஜினியின் ஆலோசனை

  கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துப் பேசி வந்தார் ரஜினி. அப்போதெல்லாம் மிகப் பெரிய எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் பயணம் குறித்து, மூத்த அரசியல் பிரமுகர்களின் ஆலோசனைகளையும் கேட்டுப் பெற்றார் ரஜினி.

  கமலும் ரஜினியும்

  கமலும் ரஜினியும்

  முரசொலி பவள விழாவில், 'தற்காப்பைவிட தன்மானமே முக்கியம்' என ரஜினியை வைத்துக் கொண்டு விமர்சித்தார் கமல். இதற்கு, சிவாஜி மணிமண்டப விழாவில் பதிலடி கொடுத்தார் ரஜினி.

  விவாதப் பொருளான ரஜினி பேச்சு

  விவாதப் பொருளான ரஜினி பேச்சு

  இதன்பிறகு, அவருடைய அரசியல் வருகை குறித்து பலவித விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் கிளப்பப்பட்டு வந்தன. இதற்கெல்லாம், எந்தவித பதிலையும் ரஜினி தரவில்லை. ஆனால் மதுரவாயிலில் ரஜினி பேசிய பேச்சு விவதாப் பொருளானது. எந்தவிதக் குறிப்பும் இல்லாமல், ரஜினி பேசிய எதார்த்த பேச்சாக பார்க்கப்பட்டது.

  பெரியார் சிலை விவகாரம்

  பெரியார் சிலை விவகாரம்


  அந்த நேரத்தில், தந்தை பெரியார் குறித்து எச்.ராஜா போட்ட பதிவு, ரஜினி பேச்சை காணாமல் போக செய்துவிட்டது. அரசியல் கட்சிகள் பலவும் பெரியார் விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடவில்லை. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமில்லாமல் பா.ஜ.கவை விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. ஆஹா ரொம்பவே பின் தங்கிவிட்டோமே என தாமதமாக உணர்ந்துதான், 'பெரியார் சிலையை உடைப்பது காட்டுமிராண்டித்தனமானது' என காட்டமாக கூறினாராம் ரஜினி.

  ஆஹா வடை போச்சே!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth slammed as barbaric the controversial comment of BJP National Secretary H Raja on Periyar statue,

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற