For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் அரசியல் நுழையக்கூடாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்களால் மரியாதைக்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் என்றுமே நுழையக் கூடாது என்பதே எனது விருப்பம்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தங்கள் கட்சிக்கு ரஜினிகாந்த் வரவேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்தது. தற்போது காங்கிரசிலிருந்து விலகி, புதுக்கட்சி துவங்கவிருக்கும் ஜி.கே.வாசன், ‘ரஜினி போன்றவர்கள் எங்கள் இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான் மட்டுமின்றி எனது தொண்டர்களும் விரும்புகின்றனர். ரஜினி ஆதரவு கொடுக்கும் அந்த நல்ல நேரத்தை எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

Rajinikanth should not come to politics, says EVKS Elangovan

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வரக் கூடாது. இது தான் என் கருத்து. அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை தமிழகத்தில் ஏராளமான மக்கள் மதிக்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் , ''இந்தியாவில் உள்ள எந்த குடிமகனாக இருந்தாலும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை இருந்தால் அது ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி காங்கிரஸில் இணைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மதச்சார்பின்மை மீது நம்பிக்கைக் கொண்ட யாருக்கும் காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று கூறினார்.

1996ஆம் ஆண்டு அதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மறைந்த ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். அதே ஆண்டு அதிமுக தலைமையிலான அரசை குறைகூறிய நடிகர் ரஜினிகாந்த், அப்போது திமுக-வுக்கும் அந்தக் கட்சி தலைமையில் கூட்டணியாக இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தார்.

ஜெயலலிதா முதல்வராக தேர்வு செய்யப்பட்டால், தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று வாய்ஸ் கொடுத்தார். அப்போது முதலே நடிகர் ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலிலும் இருந்து வருகிறது.

சமீபத்தில் ரஜினிக்கு பாஜக அழைப்பு விடுத்து அசந்து போனது காரணம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் விடுதலையான ஜெயலலிதாவிற்கு அவர் ஆறுதலாக கடிதம் எழுதினார். இதனையடுத்து தன்னுடைய அழைப்பை திரும்ப பெற்றுக்கொண்டது பாஜக. இதனையடுத்து ரஜினியின் ஆதரவினை ஜி.கே.வாசன் கேட்டு வருகிறார்

English summary
Tamil superstar Rajinikanth may have been wooed by BJP and G K Vasan, who broke away from Congress, but newly appointed Congress chief in Tamil Nadu EVKS Elangovan feels he should not enter politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X