For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு அலுவலகங்களில் அனுசரிக்கப்பட்ட ராஜீ்வ் நினைவு தினம்.. ஆனால் கமுக்கமாக !

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் தீவிரவாத எதிரப்பு தினம் அனுசரிக்கப்படுவதைப் போல, நேற்று தமிழக அரசின் சார்பில் அனுசரிக்கப்படவில்லை, ரத்து செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று அவரவர் அலுவலகத்திலேயே வைத்து இதை அனுசரித்துக் கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டிருந்ததாம்.

Rajiv Gandhi death anniversary observed in govt offices - secretly

இதனால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவரவர் இடத்திலிருந்தபடியே இதை அனுசரித்து உறுதிமொழி எடுத்துள்ளனர். ஆனால் பொதுவான நிகழ்ச்சியாக இதை நடத்தாமல் விட்டுள்ளனர்.

இப்படி அவரவர் அலுவலகத்தில் வைத்து இதை நடத்திக் கொள்ளுமாறு அரசு ஏற்கனவே சர்க்குலர் அனுப்பியுள்ளதாம். இதன் காரணமாகவே பொது நிகழ்ச்சி போல இதை நடத்துவதை ரத்து செய்து விட்டு அலுவலக மட்டத்தில் மட்டும் நடத்தியுள்ளனர் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கமாக தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை போடடு விட்டு அனைத்து ஊழியர்களும் ஒன்று கூடி தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுப்பது வழக்கம். தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அது நடைபெறவில்லை. இதனால் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

English summary
Though the govt had cancelled the Rajiv Gandhi death anniversary in publice, the govt offices in the state have observed the same in their office level, say govt staffs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X