ரஜினி, கமல், விஜய்... திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி - நியூஸ் 7 டிவி சர்வே
ரஜினி, கமல், விஜய் மூவருமே திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என நியூஸ் 7 டிவி - குமுதம் இதழ் நடத்திய சர்வேயில் மக்கள் கருத்து கூறியுள்ளனர்.
Recommended Video

சென்னை: அரசியல் கட்சி தொடங்கும் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் மூவருமே அரசியல் கட்சி தொடங்கினாலும் திமுக உடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என நியூஸ் 7 தொலைக்காட்சி - குமுதம் இதழ் இணைந்து நடத்திய மக்கள் மனசுல யாரு சர்வேயில் தெரிவித்துள்ளனர்.
ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சி - குமுதம் இதழ் சார்பாக மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் மக்கள் வித்தியாசமான கருத்துக்களை கூறியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு சவால்
ரஜினி, கமல், விஜய் மூவரும் அரசியலில் களமிறங்கி கட்சி தொடங்கினால் யாருக்கு சவாலாக இருப்பார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மக்கள் அளித்த பதில்:
ஸ்டாலின் - 36.4%
எடப்பாடி பழனிச்சாமி - 26%
டிடிவி தினகரன் - 5.1%
விஜயகாந்த் - 7.3%
அன்புமணி - 4%
தமிழிசை - 4.6%
சீமான் - 8.6%
மற்றவர்கள் - 8%
மூன்று நடிகர்களும் அரசியலுக்கு வந்தால் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கே அதிகம் சவாலாக இருப்பார்கள் என்று மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

ரஜினி யாருடன் கூட்டணி
ரஜினி அரசியல் கட்சி தொடங்கி யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியும் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
திமுக - 41.5%
அதிமுக - 21.3%
பாஜக - 15.9%
காங்கிரஸ் - 5%
இதர கட்சிகள் - 16.3% வெற்றி வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

கமலின் வெற்றி கூட்டணி
நடிகர் கமல் அரசியல் கட்சி தொடங்கி யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்:
திமுக - 47.7%
அதிமுக - 17.2 %
பாஜக - 8.5%
காங்கிரஸ் 6.3%
இதர கட்சிகள் 20.3%
நடிகர் கமல் திமுக உடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பெரும்பான்மையான மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

விஜய் கூட்டணி யாருடன்?
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
திமுக - 39%
அதிமுக - 22.8%
பாஜக - 7.7%
காங்கிரஸ் - 6.3%
இதர கட்சிகள் - 24.2 %
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி திமுக உடன் கூட்டணி வைத்தால் 39 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று மக்கள் கருத்து கூறியுள்ளனர்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை!












Click it and Unblock the Notifications