For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புனித ரமலான் நோன்பு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று துவக்கம்: கேரளாவில் மட்டும் நேற்று

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: புனித ரமலான் நோன்பு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று துவங்கியது.

பிறை தெரிந்ததும் புனித ரமலான் மாதம் துவங்கும். இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, உத்தர , மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புனித ரமலான் நோன்பு இன்று துவங்கியுள்ளது. இதையடுத்து முஸ்லிம்கள் நேற்று இரவு தராவிஹ் தொழுதனர். மேலும் இன்று அதிகாலையில் சஹர் செய்தனர். இன்று முதல் 30 நாட்களுக்கு முஸ்லிம்கள் நோன்பு இருப்பார்கள். அடுத்த பிறை தெரியும் நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

Ramadan 2014 starts in India today

கேரளாவில் நேற்று முன்தினம் இரவே பிறை தெரிந்ததால் அம்மாநில முஸ்லிம்கள் நேற்று முதல் நோன்பு இருந்து வருகின்றனர். சவுதி அரேபியாவிலும் நேற்றே நோன்பு துவங்கிவிட்டது.

வட அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் சனிக்கிழமை முதல் நோன்பு இருந்து வருகின்றனர். பிறை தெரிவதை பொருத்து நோன்பு துவங்கும் நாள் நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மேலும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் தினமும் வேறுபடும் என்பது குறிப் பிடத்தக்கது.

முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். இவ்வாறு நோன்பு வைப்பது உடல் நலத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Ramadan fasting has begun in TN, UP, Maharashtra and other states today. But Kerala started fasting from sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X