கோஹ்லி காதலி யாரு.. "நல்லா வளக்குறீங்கய்யா பொது அறிவை".. பொளந்து கட்டும் ராமதாஸ்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விராத் கோஹ்லியின் காதலி யார் என்று ஒரு பள்ளிக்கூடத்தில் கேட்கப்பட்ட கேள்வி குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நக்கல் அடித்துள்ளார்.

இந்தியப் பள்ளிகள் இப்படித்தான் பொது அறிவை வளர்க்கின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பிவாதியில் உள்ள பள்ளி ஒன்று தேர்வில் கேட்ட கேள்விதான் இது. அந்தப் பள்ளியில் கடந்த 13ம் தேதி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பி.இ.டி. தேர்வு நடந்தது. அந்தத் தேர்வில், 'கோஹ்லியின் காதலி யார்?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு மூன்று பெயர்களை ஆப்ஷனாகவும் வழங்கியது.

Ramadoss slams Maharashtra school for asking who is Kohli's lover in exam

முதல் ஆப்ஷனாக நடிகை பிரியங்கா பெயரும், இரண்டாவது ஆப்ஷனாக அனுஷ்கா பெயரும், மூன்றாவது ஆப்ஷனாக தீபிகா படுகோனே பெயரும் இருந்தது.

இது பெற்றோர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டாக்டர் ராமதாஸும் டிவிட்டரில் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், கிரிக்கெட் வீரர் விராத்கோலியின் காதலி யார்? எனக் கேள்வி: இந்திய பள்ளிகள் இப்படிப்பட்ட பொதுஅறிவைத் தான் வளர்க்கின்றன! என்று விமர்சித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Dr Ramadoss has slammed a Maharashtra school for asking who is Kohli's lover in an exam question paper. He has tweeted his comment on the issue.
Please Wait while comments are loading...