ஜெயலலிதா மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: ராமதாஸ், விஜயகாந்த் இரங்கல் !

ஜெயலலிதா மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என ராமதாஸ் மற்றும் விஜயகாந்த் கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் சற்று முன் உடல்நலக்குறைவால் காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் பயணம் அனைத்து வழிகளிலும் குறிப்பிடத்தக்கது என்பதில் ஐயமில்லை. எதிர்நீச்சலும், போராட்டமுமே அவரது வாழ்க்கையாக இருந்தது. எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், அவர் தலைமையேற்று இருந்த இயக்கத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வழி நடத்திச் சென்றார் என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தின் முதலமைச்சராக நான்கு முறையும், எதிர்க்கட்சித் தலைவராக இரு முறையும் பதவி வகித்த ஜெயலலிதா, அவரது பதவிக்காலத்தில் பலமுறை முத்திரை பதித்திருக்கிறார். 1992-ஆம் ஆண்டில் பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்குடன் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை அறிமுகம் செய்தது, ஏழைக் குடும்பங்களை சீரழித்த பரிசுச் சீட்டுக்களை ஒழித்தது, புதிய வீராணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி சென்னை குடிநீர் பஞ்சத்திற்கு முடிவு கட்டியது ஆகியவை ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட சில குறிப்பிடத்தக்க திட்டங்கள் ஆகும்.

ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அ.தி.மு.கவினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Ramadoss and vijayakanth mourns jayalalithaa's death

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்டது சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அதிமுகவினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்‍. இவ்வாறு விஜயகாந்த் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+