For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தான் ஆடாவிட்டாலும் தசை ஆடியது.. எம்ஏஎம்.ராமசாமியின் சொத்துக்கள் ஏ.சி.முத்தையாவுக்கு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள அறக்கட்டளை சொத்துக்கள், எம்.ஏ.எம் ராமசாமியின் சகோதரர் ஏ.சி.முத்தையாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தொழிலதிபர் ராமசாமியின் உறவுக்காரவழி சகோதரர் ஏ.சி.முத்தையா. ஸ்பிக் குழுமங்களின் தலைவராக இருந்த சிதம்பரம் செட்டியாரின் மகனான, முத்தையா, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர்.

சீனிவாசனுடன் மோதல்

சீனிவாசனுடன் மோதல்

சீனிவாசனை பிசிசிஐ தலைவராக முன்மொழிந்ததே முத்தையாதான் என்றபோதிலும், அதன்பிறகு சீனிவாசன், முத்தையாவை புறக்கணித்ததால் பனிப்போர் வெடித்தது. ஜெயலலிதா சமீபத்தில் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் விழாவில் இவ்விருவரும் பங்கேற்றபோது கூட பேசிக்கொள்ளவில்லை.

விலகியிருந்த சகோதரர்கள்

விலகியிருந்த சகோதரர்கள்

சகோதரராக இருந்தாலும், ராமசாமியுடன், முத்தையாவுக்கு மனத்தாங்கல்கள் இருந்து வந்தன. இருவரும் சற்று விலகியே இருந்தனர். இந்நிலையில்தான் ராமசாமி 1000 கோடி மதிப்புள்ள 2 அறக்கட்டளைகளை உருவாக்கியுள்ளார். அதை நிர்வகிக்கும் பொறுப்பை முத்தையாவுக்கு கொடுத்துள்ளார்.

பிரச்சினை என்றதும் ஓடி வந்தார்

பிரச்சினை என்றதும் ஓடி வந்தார்

இந்த நடவடிக்கைகளை பார்த்த ராமசாமியின் வளப்பு மகன் ஐயப்பன் "சொத்துக்களை அபகரிக்கவே முத்தையா நெருங்கி வந்துள்ளார்" என்று கூறியிருந்தார். இதுகுறித்து, ராமசாமியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராமசாமி "ஏ.சி.முத்தையா ஒன்றுமில்லாதவரா? எங்களுக்குள் சில சங்கடங்கள் இருந்தது உண்மைதான். அதையெல்லாம் மறந்து, எனக்குப் பிரச்சினை என்றதும் ஓடி வந்தார். இதை ஐயப்பனால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் இப்படி ஆவேசப்படுகிறார். ஏ.சி.முத்தையாவை விட்டு நான் விலகிவிடுகிறேன் என்று சொன்னால் போதும், நாளைக்கே ஐயப்பன் என் காலடியில் வந்து விழுந்துவிடுவார்" என்று கூறினார்.

தானாடாவிட்டாலும் தசை ஆடியது

தானாடாவிட்டாலும் தசை ஆடியது

1996ம் ஆண்டு ஐயப்பனுக்கு 20 வயதாக இருந்தபோது, ராமசாமி அவரை தத்தெடுத்தார். ஐயப்பனும் செட்டியார் ஜாதியை சேர்ந்தவர்தான். 2 வருடங்கள் முன்புதான், தந்தை-மகனுக்குள் தகராறு வெடித்தது. இந்நிலையில், ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏ.சி.முத்தையாவுக்கு முக்கிய பொறுப்பையும், சொத்தையும் கொடுத்து அழகு பார்த்துள்ளார் ராமசாமி. தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்று கூறுவது இதைத்தான்போலும். அங்கு சுற்றி, இங்கு சுற்றி சகோதரரிடமே பொறுப்பை கொடுத்துள்ளார் ராமசாமி.

English summary
Ramaswamy said he has now decided to name his cousin and former Spic chief Muthiah as heir to the Chettinad legacy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X