For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதி கொலை: சிபிஐ விசாரணை கோரி ராம்குமார் தாயார் புஷ்பம் ஹைகோர்ட்டில் மனு தாக்கல்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறக் கூடும் என தெரிகிறது.

சுவாதி கொலை வழக்கில் நெல்லை ராம்குமார் தான் குற்றவாளி என கூறி வருகிறது போலீஸ் தரப்பு. ஆனால் உண்மை குற்றவாளிகளை தப்பவிடுவதற்காக ராம்குமார் குற்றவாளியாக்கப்படுகிறார் என்கின்றனர் அவரது பெற்றோர்கள்.

Ramkumar's mother seeks CBI probe on Swathi murder case

இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புதிய தகவல்களை பிரான்ஸில் உள்ள பெரியாரிஸ்டான தமிழச்சி பகிரங்கப்படுத்தி வருகிறார். இக்கொலை வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி சில உண்மைகளை சொன்னதால் கொலை மிரட்டலுக்கு ஆளான பெண் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரது வாக்குமூலம் ஒன்றையும் தமிழச்சி வெளியிட்டிருந்தார்.

இதனிடையே சென்னை புழல் சிறையில் உள்ள ராம்குமாரை அவரது பெற்றோர் பரமசிவம்- புஷ்பா ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமாரின் தந்தை பரமசிவம், சிறையில் தாம் நலமுடன் இருப்பதாக ராம்குமார் கூறினார் என்றார்.

இந்நிலையில் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது வரும் 23-ந் தேதி விசாரணை நடைபெறக் கூடும் என கூறப்படுகிறது.

English summary
Ramkumar's mother filed a pettion to seek CBI probe on Swathi murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X