ரம்ஜான் பண்டிகை... களைகட்டியது செஞ்சி ஆட்டுச் சந்தை... ரூ.6 கோடிக்கு விற்பனை அமோகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

செஞ்சி: ரம்ஜான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், செஞ்சியில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்று ஆட்டு சந்தை கூடியது. இதில் செஞ்சியை சுற்றியுள்ள 120 கிராமங்களிலும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.

இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர். செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகள் மலைப்பகுதி மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்கள் உள்ளன.

வெள்ளிக்கிழமைதோறும்...

வெள்ளிக்கிழமைதோறும்...

செஞ்சி சந்தைமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் வரும் திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டப்படவுள்ளது.

4 மணிக்கே விற்பனை

4 மணிக்கே விற்பனை

அதிகாலை 4 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர்.

சென்னை உள்ளிட்ட...

சென்னை உள்ளிட்ட...

மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.

ரூ.11 ஆயிரம்

ரூ.11 ஆயிரம்

வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலைஆடு உள்ளிட்ட 10 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ. 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச்சந்தையில் ரூ. 6 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.

கோழிகளும் விற்பனை

கோழிகளும் விற்பனை

நாட்டுக்கோழிகளும் விற்கப்பட்டன. இது தவிர இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளும் அதிகளவில் விற்பனையானது. வாரச் சந்தை களைகட்டியதால் டீக்கடை, ஓட்டல் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் அனைத்து தரப்பும் மகிழ்ச்சியாகி கையில் நாலு காசு பார்த்தனர். மாடடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடைவிதிக்கப்பட்ட நிலையில் ஆடுகளாவது விற்பனை மனதுக்கு திருப்தியுடன் நடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Goats sale upto Rs. 6 crore at weekly market in Gingee. Farmers were very happy.
Please Wait while comments are loading...