"இணைந்த" தாமரையும் இரட்டை இலையும்... இது புதுஸ்ஸா இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டதில் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கலந்து கொண்ட கோலப் போட்டியில் தாமரை பூவுக்கு இரட்டை இலை சின்னம் இலையாக வரையப்பட்டிருந்ததால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

 A rangoli which shows like Lotus and two leaves are merged

முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த வண்ணம் உள்ளனர். மேலும் ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு இசைவு கொடுத்தது.

இந்நிலையில் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் இன்று சூலூரில் கோல போட்டியை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த ஒரு கோலம் அவரது மனதை கவர்ந்தது. அதாவது தாமரை பூவுக்கு இலையாக இரட்டை இலை வரையப்பட்டிருந்தது. இந்த படம் தற்போது வைரலாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sulur MLA Kanagaraj who oversees the Rangoli competition shows lotus with two leaves symbol.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற