For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2,52,431 கோடி- ஓபிஎஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2,52,431 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்த மாநில நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடப்பாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் என்றார். தமிழக அரசு கடன்களுக்கு செலுத்தும் வட்டி தொகை ரூ.21,215.67 கோடி என்றும், அடுத்த நிதியாண்டில் அரசு செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ.24,185.,86 கோடியாக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Revenue deficit of TN goes up in revised budget for 2016-17

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த ஓபிஎஸ் வாசித்த அறிக்கையில் புள்ளி விபரம் :

•தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854.47 கோடி. கடந்த ஆண்டை விட நிதிப் பற்றாக்குறை 10.99 சதவீதம் அதிகரித்துள்ளது.

•மொத்த நிதி பற்றாக்குறை ரூ.40,533.84 கோடி ஆகும். தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய் ஆக உள்ளது. திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி ஆகும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

•தமிழக அரசு கடன்களுக்கு செலுத்தும் வட்டி தொகை ரூ.21,215.67 கோடி என்றும், அடுத்த நிதியாண்டில் அரசு செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ.24,185.,86 கோடியாக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

• தமிழக பட்ஜெட் 2016-17-ல் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:

• மாநில உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி

• மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு ரூ.396 கோடி

• தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி

• சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி

• மின்துறைக்கு ரூ.13,856 கோடி

• சிறைத் துறைக்கு ரூ.282.92 கோடி நிதி

• நீதி நிர்வாகத்துக்கு ரூ.993.24 கோடி நிதி

• போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,295.08 கோடி நிதி
• தோட்டக்கலை துறைக்கு ரூ.518 கோடி நிதி

• மீன்வளத் துறைக்கு ரூ.743.79 கோடி நிதி ஒதுக்கீடு

• பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு

• வேளாண் துறைக்கு ரூ.1,680 கோடி நிதி ஒதுக்கீடு

• மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9,073 கோடி நிதி ஒதுக்கீடு

• நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1,220.28 கோடி நிதி ஒதுக்கீடு

• தீயணைப்புத் துறைக்கு ரூ.230.07 கோடி நிதி ஒதுக்கீடு

English summary
Finance Minister O.Panneerselvam filed the revised budget for the financial year 2016-17. Below are the notable features of the budget. Overall estimate of the revised budget is Rs 1,48,175.09 crore.A sum of Rs 2,52,431 crore will be allotted for overall debts in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X