For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது... "அது" ஜெயலலிதா மெழுகுச் சிலையா.. பீதி கிளப்பும் சுயேச்சை வேட்பாளர்!

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல் மெழுகு பொம்மையான என ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நம்பி என்ற வேட்பாளர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல் மெழுகு பொம்மையான என ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நம்பி என்ற வேட்பாளர் பீதியை கிளப்பியுள்ளார். செப்டம்பர் 22ஆம் தேதி அன்றே ஜெயலலிதா உடலை மறைத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது என்றும் நம்பி கூறியுள்ளார்.

எம்ஜிஆர் நம்பி என்பவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். கட்சியின் கொடியை சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்தி பேசினார்.

அப்போது ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தீய சக்திகள் தான் உள்ளது என ஜெயலலிதாவே தனது கனவில் வந்து கூறியாதாக தெரிவித்தார். அதனால் ஜெயலலிதாவின் ஆவி தற்போது எம்ஜிஆரின் சமாதியில்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

தீயதே நடக்கிறது

தீயதே நடக்கிறது

இதனால் தான் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்பவர்களுக்கு எல்லாம் தீயதே நடப்பதாகவும் அவர் கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நம்பி மேலும் கூறியதாவது,

ஜெ. உடலை மறைத்துவிட்டார்களோ?

ஜெ. உடலை மறைத்துவிட்டார்களோ?

"ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களும் நாடகம்தான் நடந்தது. செப்டம்பர் 22ஆம் தேதி அன்றே ஜெயலலிதா உடலை மறைத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

ஜெ. உடல் மெழு பொம்மையா?

ஜெ. உடல் மெழு பொம்மையா?

டிசம்பர் 6ஆம் தேதி ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மெழுகு பொம்மையா என சந்தேகப்படுகிறேன். ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது பதவி போன பிறகு நியாயம் கேட்டு போராடுவதுபோல் நடிக்கிறார்." இவ்வாறு கூறினார்.

கூடுதல் பரபரப்பு

கூடுதல் பரபரப்பு

ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழாத நிலையில் ஆர்.கே.நகர் வேட்பாளர் நம்பி எழுப்பியிருக்கும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூடுதல் சூட்டை கிளப்பிவிட்டுள்ளது.

English summary
RK.Nagar Candidate raising doubts on Jayalalitha's death. He was asking that was it was doll which was keeping in Rajaji Hall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X