வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவினரை பார்த்துவிட்டு வந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி பறிப்பு
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவினரை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கணவருடன் வீடு திரும்பிய பெண்ணிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்து உள்ள நங்கநல்லூரில் வசித்து வருபவர் சுதாகர். அவரின் மனைவி சசிகலா. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உறவினரை சந்திக்க சுதாகர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

உறவினரை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு அவர் மனைவி, குழந்தைகளுடன் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். தாம்பரம் காந்தி சாலையில் இருந்து அவரின் வாகனத்தை கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் சசிகலாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துள்ளனர்.
இதை பார்த்த சுதாகர் கொள்ளையர்களை இருசக்கர வாகனத்தில் துரத்தினார். அப்போது நிலைதடுமாறி அவரின் வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் சுதாகர், சசிகலா, குழந்தைகள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சுதாகர் சங்கிலி பறிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். வெள்ளத்தால் நொந்து போயுள்ள மக்களை இந்த கொள்ளை சம்பவம் மேலும் நோகடித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications