பிரபல ரவுடி சிடி மணி கைது.. தனிப்படை போலீஸ் நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.
பிரபல ரவுடி சிடி மணி கைது செய்வதற்காக, சென்னை போலீஸ் கூடுதல் துணை ஆணையர் குமார் தலைமையிலான தனிப்படை குழுவை அமைத்து இருந்தது. கடந்த சில மாதங்களாக போலீஸ் இவனை தேடி வந்தது. கடந்த மே 6ம் தேதியில் இருந்து போலீஸ் இவனை தேடி வந்தது.

சிடி மணி மீது மொத்தம் 8 கொலை வழக்குகள், சில பண மோசடி வழக்கு, சில மிரட்டல் வழக்குகள் இருக்கிறது. ஏற்கனவே சிடி மணியை போலீஸ் மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.
கடைசியாக ஜெகா என்ற நில ஒப்பந்தாரர் வீட்டில் மணியின் ஆட்கள் பெட்ரோல் கொண்டு வீசி இருக்கிறார்கள். அதேபோல், மணியின் ஆட்கள் ஜெகாவை இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடைப்படையில்தான் போலீஸ் மணியை தேடி வந்தது.
இந்த நிலையில் கூடுதல் துணை ஆணையர் குமார் தலைமையிலான தனிப்படை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூரில் வைத்து போலீஸ் அவனை கைது செய்தது. அவனிடம் இருந்த துப்பாக்கிகள், குண்டுகள், போதை பொருள், அருவாள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications