For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட்: அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்... ரூ.183.24 கோடி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபரில் நடத்தப்படும் என்றும் இதற்காக ரூ.183.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அதே ஆண்டில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதத்துடன் நிறைவுபெறுகிறது.

Rs.183.24 crore for local body election - Tamilnadu budget

தற்போது இந்த ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 12 மாநகராட்சிகள் உள்ளன. அவற்றில் 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என மொத்தம் 1,32,458 பதவிகள் உள்ளன.

இந்நிலையில், இன்று சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த ரூ183.24 கோடி செய்யப்படுவதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.

English summary
Finance minister O Panneer Selvam announced in Tamilnadu budget thet Rs.183.24 crore alloted for local body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X