சென்னை கோர்ட்டில் எஸ் வி சேகர் ஆஜர்

பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் எஸ் வி சேகர் ஆஜரரானார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ் வி சேகர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்தினார். அப்போது நிகழ்ச்சியின் முடிவில் பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது அந்த பெண் நிருபரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த ஆளுநர் வருத்தம் தெரிவித்தும் அதை நிருபர் ஏற்கவில்லை. இதை கண்டித்து பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பொருள்படும் படி பேஸ்புக்கில் பதிவிட்டார் எஸ் வி சேகர்.

வழக்கு

வழக்கு

இதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரது வீட்டை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஹைகோர்ட்டில் எஸ் வி சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து எஸ் வி சேகர் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவரை கைது செய்ய தடை விதிக்கவும் முடியாது என்று தெரிவித்துவிட்டது. இதையடுத்து எஸ் வி சேகர் தலைமறைவானார். வெளியே எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்று வந்தார்.

கைது செய்ய உத்தரவு

கைது செய்ய உத்தரவு

இந்நிலையில் எஸ் வி சேகரை கைது செய்யாதது ஏன் என்று ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் எஸ் வி சேகருக்கும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் கரூர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதில் குறிப்பிட்ட தேதியில் சேகர் ஆஜராகாததால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

எஸ் வி சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்

எஸ் வி சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்

இதையடுத்து இன்றைய தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ் வி சேகர் ஆஜராகினார். அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பில் வந்துவிட்டு அப்படியே சென்றுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+