8 வழி சாலை பற்றி கருத்து கேட்பு கூட்டம்.. தருமபுரியில் எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
சேலம் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க சென்ற அந்த தொகுதி எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
சென்னை: சேலம் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க சென்ற அந்த தொகுதி எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழக அரசு நிலங்களை எப்படியாவது வாங்க முயற்சி எடுத்து வருகிறது.

இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தருமபுரியில் இந்த சாலைக்காக 90 சதவிகித நிலங்களை வாங்கிவிட்டதாக தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
இந்த நிலையில் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க அந்த தொகுதி எம்.பி அன்புமணி முடிவெடுத்தார். இதுகுறித்து கருத்து கேட்க அவர் இன்று தொகுதிக்கு செல்ல முடிவெடுத்து இருந்தார்.
ஆனால் அவர் தொகுதிக்கு வருவதற்கு முன்பே அங்கு பல போலீசார் குவிக்கப்பட்டார்கள். அதேபோல் அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்தநிலையில் அங்கு சென்ற எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
தருமபுரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீஸ் அவரிடம் கூறியுள்ளது. மேலும் பாப்பிரெட்டிபட்டியில் நாளை கருத்து கேட்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் இந்த கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட வாய்ப்புள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications