For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்.. ஜல்லிக்கட்டுக்காக காளையின் மணல் சிற்பம் தீட்டிய சுதர்சன் பட்நாயக்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

Sand artist Sudarsan Pattnaik support for jallikattu

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் அறவழியில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. தமிழக அரசு அனுப்பிய அவசரச் சட்டத்துக்கான முன்வடிவு, மத்திய உள்துறை அமைச்சக பரிசீலனையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் காளையின் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், கலாச்சாரத்தை மதிக்க வேண்டும், விலங்குகள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையே தனது ஜல்லிக்கட்டு ஆதரவு மணல் சிற்பத்திலும் பதிவு செய்துள்ளார்.

English summary
Sand-artist Sudarsan Pattnaik support for jallikattu, through his artwork at the Puri Beach, Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X