விரைவில் கூடுதல் மணல் குவாரிகள்.. விலையும் குறையும்.. சட்டசபையில் முதல்வர் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் மணல் விலை குறையும் என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தகவல் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் கூடிய சட்டசபையில் இன்று பல்வேறு விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Sand price will be down soon, says CM Palanisamy

இதனையடுத்து, தமிழகத்தில் கூடுதலாக மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளது என்றும் அதனால் மணல் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 30 மணல் குவாரிகளையே அரசு ஏற்று நடத்தி வருகிறது. இடையில் திடுதிப்பென மூடப்பட்ட இந்த குவாரிகள் பின் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது. இதனால் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மணல் விலை கடுமையாக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து, உபயோகிப்பாளர்களுக்கு மணல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைத்திட பொதுப்பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு கூறி வந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி இந்த அறிவிப்பை சட்டசபையில் அறிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
More sand quarries will be open soon, said CM Palanisamy in assembly session.
Please Wait while comments are loading...