For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுப்ரபாதம், காற்றினிலே வரும் கீதம் பாடலை யூடியூப்ல கேட்க முடியாதாமே?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: யு டுயூபில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் விஷ்ணு சகஸ்ரா நாமம், கணேச பஞ்சரத்னம் கீர்த்தனைகளை கேட்க நினைத்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த பாடல்கள் காப்புரிமை பெற்ற 'சரிகம' நிறுவனம் முடக்கி விட்டதாக திரையில் தகவல் தெரிந்தது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் சுப்ரபாதம் கேட்டு அந்த ஏழுமலையான் மயங்குகிறாரோ இல்லையோ ஏராளமான மக்கள் அந்த குரலுக்கு மயங்கி கிடங்கின்றனர். இனி அந்த பாடல்களை சாமான்ய மக்கள் சாதாரணமாக கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காப்புரிமை பெற்ற எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பிரபல பாடல்கள் அனைத்தையும் பே சேனல் ஆக மாற்றி காசு பார்க்கும் முயற்சியில் சரிகம ஆடியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காப்புரிமை தொடர்பாக, இசையரசி என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் "விஷ்ணு சகஸ்ரணாமம் பாடலை" யூ டியூபில் இருந்து சரிகம இசை வெளியீட்டு நிறுவனம் இன்று நீக்கியுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா அவர்களின் பல பாடல்களை இதேபோல ப்ளாக் செய்யப்பட்டுள்ளன.

கணேசா பஞ்சரத்னம்

எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைத் தடை செய்த யூ ட்யூப்!

தாங்கள்தான் நீக்கினோம் என்று சரிகம, இதுவரை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், யூ டியூபின் விதிமுறை அறிந்த இணையதளவாசிகள், பாடலின் காப்புரிமை பெற்ற நிறுவனமே, அந்த பாடலை யூ டியூபில் இருந்து நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று எழுதி வருகின்றனர்.

கிருஷ்ண பஜன்

இதே போல எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய கிருஷ்ண பஜன் பாடலின் ஆடியோவை மட்டும் நிறுவிட்டது. காப்புரிமையால் ஆடியோவை மியூட் செய்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற பாடல்கள்

புகழ் பெற்ற பாடல்கள்

இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் புகழ் பெற்ற பாடல்களான, சுப்ரபாதம்..., காற்றினிலே வரும் கீதம்..., பஜகோவிந்தம்..., குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ... ஐந்து கரத்தனை...ஆனை முகத்தனை என்று தொடங்கும் விநாயகர் அகவல்...,பாருக்குள்ளே நல்ல நாடு...,ஒளி படைத்த கண்ணினாய்... உள்ளிட்டவையின் காப்புரிமையும் "சரிகம" நிறுவனத்திடம் இருப்பது தெரிய வந்துள்ளது.

காப்புரிமை காசு

காப்புரிமை காசு

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சரிகம காப்புரிமை பெற்ற, எம்.எஸ்.இன் பிரபல பாடல்களை, யூ டியூபில் பே சேனல்ஆக மாற்றி காசு பார்க்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி போன்றவர்களின் குரல் என்பது மக்களுக்கே சொந்தமானது என்றும், அதை வைத்து காசு பார்க்கும் முயற்சியில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் தீவிர இசை ரசிகர்கள் சரிகம நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

English summary
“Unable to listen to Vishnu Sahasranamam by Smt M.S.Subbulakshmi on YouTube today,” Sudha Umashanker said on Facebook. The users found identical messages flashed on their screens when they tried to access links on YouTube to find the rendition. “This video contains content from Saregama, who has blocked it on copyright grounds,” the YouTube screen said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X