பாஜகவினரை உசுப்பேற்றும் விஜய் பட தலைப்பு.. மெர்சலை தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் 'சர்கார்'
Recommended Video

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு 'சர்கார்' என பெயர் சூட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது முதலே, இணையதளங்களில் படத்தின் பெயர் பற்றிய சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. சர்கார் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு கடந்த சில வருடங்களாக அதிகம் அறிமுகமானதுதான் இதற்கு காரணம்.
"ஆப் கி பார் மோடி சர்கார்" என்ற கோஷத்தோடுதான் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது பாஜக. இந்தியா முழுக்க வீசிய மோடி அலையால் மோடி சர்கார் (அரசு) அமைந்தது.

வாய்க்கால் தகராறு
இந்த நிலையில், விஜய் படத்திற்கு சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளதுதான் சூட்டை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், ஏற்கனவே விஜய்க்கும், பாஜகவுக்கும் இருக்கும் 'வாய்க்கால் தகராறுதான்'. மெர்சல் திரைப்படத்தில், ஜிஎஸ்டி தொடர்பாக இடம் பெற்ற தவறான புள்ளி விவர வசனங்களை தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டித்தனர். கோயில் வேண்டாம், ஆஸ்பத்திரி கட்டுவோம் என படத்தில் இடம் பெற்ற டயலாக்கிற்கும் பாஜக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

ஜோசப் விஜய் என்று விமர்சனம்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒருபடி மேலேயே போய், விஜய் உண்மையான முழுப்பெயர் ஜோசப் விஜய் என கூறி, அவர் கிறிஸ்துவர் என்பதால்தான், இந்துக்களுக்கு எதிராக வசனம் பேசுவதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இதனிடையே விஜய் தந்தையும், இயக்குனருமான, எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வெளியாக உள்ள டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தில் டிராஃபிக் ராமசாமி கதாப்பாத்திரத்தில் நடித்தபோதிலும், உண்மையான ராமசாமியை போல நெற்றியில், நாமம் பூசவில்லை என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.

இருக்கு, என்னவோ இருக்கு
மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிராக நிறைய வசனங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், விஜயின் அடுத்தபடத்திற்கு மோடியின் கோஷத்தை ஒட்டிய சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளதால், இந்த படம் கண்டிப்பாக பாஜகவிற்கும், மத்திய அரசுக்கும் கோபத்தை ஊட்டக்கூடிய வசனங்களையோ கதையமைப்பையோ கொண்டிருக்கும் என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் நிலவுகிறது.
|
நெட்டிசன்கள்
பாஜகவை எதிர்க்கும் ஒரே தமிழன் என உசுப்பேற்றுகிறார் இந்த நெட்டிசன். மோடியின் கோஷம்தான் படத்தின் தலைப்பு என்பது இவரது கருத்து.
|
அரசியலில் இதெல்லாம்
ஆப் கி பார் மோடி-க்கி #சர்கார் நஹி ஹே... தமிழன் #சர்கார் 😎😎 என்று கூறி இவரும் பாஜகவினரை உசுப்பேற்றுகிறார். ஆனால் ஒரு விஷயத்தை மறக்க முடியாது. தமிழகம் வந்தபோது, விஜயை மோடி நேரில் சந்தித்துள்ளார். இதன்பிறகுதான் மெர்சலில் மத்திய அரசுக்கு எதிரான சில காட்சிகள் இடம் பெற்றன. இதேபோல, ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி திரைப்படத்தில், 2ஜி ஒரு ஊழல் என டயலாக் பேசியவர் விஜய். இப்போது சன் நெட்வொர்க் படத்தில் இவ்விருவருமே இணைந்துள்ளனர். எனவே அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்கிறார்கள் ரசிகர்கள்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications