இடைவிடாது தொடரும் ஐடி ரெய்டுகளால் கடும் உளைச்சலில் சசிகலா.. தூக்கமில்லாமல் தவிப்பதாக தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவுக்கு அடுத்த நெருக்கடி.. சிறையில் சலுகை பெற்றது உண்மை..வீடியோ

  பெங்களூரு: தமது உறவினர்கள் 355 பேரை வளைத்து வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் சசிகலா ரொம்பவே அதிர்ந்து போய்விட்டாராம். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக தூங்காமல் விடிய விடிய டிவி சேனல்களை பார்த்துக் கொண்டே இருக்கிறாராம் சசிகலா.

  சசிகலாவின் 355 உறவினர்கள், 190 இடங்கள், 2,000 அதிகாரிகள்... 100 மணிநேரத்துக்கும் மேலாக இடைவிடாத சோதனை... இந்த தேசம் இதுவரை கண்டிராத மாபெரும் வருமான வரித்துறை ரெய்டு இது.

  பக்கா ஸ்கெட்ச்

  பக்கா ஸ்கெட்ச்

  பக்காவாக திட்டமிட்டு வருமான வரி சோதனையை கனகச்சிதமாக அரங்கேற்றி வருகின்றனர் அதிகாரிகள். சசிகலா குடும்பத்தின் அத்தனை தொடர்புகளையும் ஒரே அடியில் முழு வீச்சில் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது வருமான வரித்துறை.

  அதிர்ச்சியில் சசிகலா

  அதிர்ச்சியில் சசிகலா

  இதனால் சசிகலா குடும்பத்தினர் எங்கும் எஸ்கேப்பாக முடியாமல் விழிபிதுங்கிப் போயுள்ளனர். இந்த தகவல் கிடைத்தது முதலே பெங்களூரு சிறையில் சசிகலா கடும் அதிர்ச்சியில் உறைந்ததுடன் உளைச்சலுக்கும் ஆளானாராம்.

  வரிக்கு வரி வாசித்த சசி

  வரிக்கு வரி வாசித்த சசி

  வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவு நேரங்களில் அதிகாலை 1 மணிவரை தமிழ் டிவி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாராம் சசிகலா. விடிந்தும் விடியாததுமாக நூலகத்துக்குப் போய் அத்தனை தமிழ்ப் பேப்பர்களையும் வரிக்கு வரி வாசித்து என்ன நடக்கிறது என தெரிந்து கொண்டாராம்.

  இளவரசியுடன் ஆலோசனை

  இளவரசியுடன் ஆலோசனை

  ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்றரை மணிநேரம் நூலகத்திலேயே உட்கார்ந்து இருந்தாராம் சசிகலா. அதன் பின்னர் இளவரசியுடன் ஆலோசித்துவிட்டு ஒரு கடிதம் ஒன்றை யாருக்கோ அனுப்ப எழுதியிருக்கிறார். இந்த ரெய்டைத் தொடர்ந்து சசிகலா ரொம்பவே ஆடிப் போயிருக்கிறார் என்பதைத்தான் அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன என்கின்றன பெங்களூரு சிறை வட்டாரங்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  After the Income Tax Raids, Sasikala spend more time for the watching Tamil TV Channels and reading Tamil News Papers, sources said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற