சசிகலாவை இனி அக்கான்னு கூப்பிட மாட்டேன்.. திவாகரன் கடும் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலா இனி என் சகோதரி அல்ல- திவாகரன் கடும் கோபம்-வீடியோ

  மன்னார்குடி சசிகலா இனி என் சகோதரி அல்ல என திவாகரன் தெரிவித்துள்ளர். சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

  தினகரன் - திவாகரன் இடையிலான மோதல் பூதாகரமாகியுள்ளது. இருவரும் மாறி மாறி மீடியாக்களிடம் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.

  இதைத்தொடர்ந்து திவாகரன் மன்னார்குடியில் தனிக்கட்சியையும் அதற்கான அலுவலகத்தையும் அண்மையில் திறந்தார். அதோடு மாவட்ட நிர்வாகிகளையும் அறிவித்தார்.

   தினகரனுக்கு சசிகலா நோட்டிஸ்

  தினகரனுக்கு சசிகலா நோட்டிஸ்

  இந்த விவகாரம் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. திவாகரன் கட்சியில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார் சசிகலா.

   திவாகரன் பதிலடி

  திவாகரன் பதிலடி

  இரண்டு நாட்கள் கடந்தும் இதுகுறித்து வாய்திறக்காமல் இருந்த திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சசிகலா இனி என் சகோதரி இல்லை.

   சசிகலா இனி என் சகோதரி அல்ல

  சசிகலா இனி என் சகோதரி அல்ல

  சசிகலாவை இனி அக்கா என அழைக்கமாட்டேன். சசிகலா என் முன்னாள் சகோதரி. சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல்.

   சசிகலாவை பழிவாங்குகிறார்

  சசிகலாவை பழிவாங்குகிறார்

  சசிகலா நோட்டீஸ் வழங்கியதால் எங்களது அரசியல் பயணம் நின்றுவிடாது. என் மூலமாக சசிகலாவை தினகரன் பழிவாங்க நினைக்கிறார்.

   மனநோயாளிக்கு ஏன் நோட்டீஸ்

  மனநோயாளிக்கு ஏன் நோட்டீஸ்

  எனக்கு மனநிலை சரியில்லை என்று தினகரன் சொல்வது கையாலாகதத்தனம். என்னை மனநோயாளி என கூறும் தினகரன் எனக்கு நோட்டிஸ் அளித்ததே தவறு. எனக்கு மனநலம் சரியில்லை என தினகரன் என் மீதுள்ள ஆதங்கத்தில் கூறி வருகிறார்.

   ஓபிஎஸ்- சசிகலா மோதல்

  ஓபிஎஸ்- சசிகலா மோதல்

  ஓபிஎஸ் - சசிகலா இடையே விரோதத்தை ஏற்படுத்தியவர் தினகரன்தான். யாரும் பிறக்கும்போதே பதவியுடன் பிறப்பதில்லை.

   குடும்பத்திலிருந்து நீக்கியதற்கு நன்றி

  குடும்பத்திலிருந்து நீக்கியதற்கு நன்றி

  என்னை குடும்பத்திலிருந்து நீக்கியதற்கு நன்றி. என்னை இனி மாஃபியா குடும்பம் என அழைக்க மாட்டார்கள். தினகரன் ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவர் போல் செயல்படுகிறார். ஜெயலலிதாவின் உயிரை மூன்று முறை காப்பாற்றிவன் நான். இவ்வாறு திவாகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

   சசிகலா குடும்பத்தில் மோதல்

  சசிகலா குடும்பத்தில் மோதல்

  சசிகலா இனி தனக்கு அக்கா இல்லை என கூறியிருப்பதால் மன்னார்குடி குடும்பத்தில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது உறுதியாகியுள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Diwakaran has said Sasikala is not my sister anymore. He also said I will not call her anymore as my sister. He also raised a question that why they sent notice to mentally ill person?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற