மைக் கூட பிடித்து பேசாமலேயே நாட்டின் 3வது பெரிய கட்சி தலைவரான சசிகலா!
மைக் பிடித்து பொதுக் கூட்டத்தில் பேசியறியாத சசிகலா, நேரடியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். போயஸ் இல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணியளவில் அவர் காரில் கிளம்பி, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து கடந்த வியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதை ஏற்றுக்கொண்டு சசிகலா இப்பதவிக்கு வந்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. இதன்மூலம், மக்களவையில் பாஜக (282), காங்கிரஸுக்கு (44) அடுத்தபடியாக 3வது இடத்தை அதிமுக பிடித்தது.
மாநிலங்களவையை பொறுத்த வரை, தமிழகத்தில் 11 மற்றும் புதுச்சேரியில் 1 என மொத்தம் 12 எம்பிக்களுடன் 4வது இடத்தில் அதிமுக இருந்தது. சமீபத்தில் நடந்த மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தலில் அதிமுகவுக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்தது. இதன்மூலம், மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
மாநிலங்களவையில் காங் கிரஸுக்கு 64, பாஜகவுக்கு 49 மற்றும் சமாஜ்வாதிக்கு 15 உறுப்பினர்கள் உள்ளனர். 4வது இடத்தில் 13 எம்பிக்களுடன் அதிமுக உள்ளது. எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து அதிமுகவின் பலம் 50ஆக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தின் எந்த கட்சியும் இந்த அளவு எம்பிக்கள் பலத்தை கொண்டிருந்ததில்லை.
ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் மொத்த எம்.பிக்கள் எண்ணிக்கை 49ஆக உள்ளது. இருப்பினும் லோக்சபாவில் அதிமுகவுக்கு 3வது இடம் அப்படியேதான் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு கட்சியின் தலைமை பதவியான பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்பு எப்போதுமே, மைக் பிடித்து பொதுக் கூட்டத்தில் பேசியறியாத சசிகலா, நேரடியாக இப்பதவிக்கு வந்துள்ளார்.
பதவியேற்ற பிறகே, சசிகலா முதல் முறையாக மைக்கை பிடித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications