சசிகலா பரோல் நாளையுடன் முடிவு! : உறவுகளுடன் தீவிர ஆலோசனை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலா மருத்துவமனைக்கு சென்று வரும் நேரம் தவிர மீதி நேரங்களில் கட்சியின் உள்ள குளறுபடிகளை தீர்ப்பது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிரைக்கு சென்று சசிகலா தற்போது 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.

Sasikala's Parole ends tomorrow and return to prison

சசிகலாவின் கணவர் நடராஜன் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனையில் உள்ளார். அவரைப் பார்ப்பதற்காக பரோல் கேட்டு வந்த சசிகலா, தினமும் அவரை மருத்துவமனையில் ஒரு சில மணிநேரங்கள் பார்த்து விட்டு வருகிறார்.

தற்போது இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியிருக்கும் அவர், கட்சியில் நிலவும் குளறுபடிகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் உறவுகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சசிகலாவின் பரோல் நாளையுடன் முடிவடைவதையடுத்து அவர் மீண்டும் மாலைக்குள் சிறைக்குச் செல்ல இருக்கிறார். அதற்குள் குடும்ப பஞ்சாயத்துக்களை பேசி முடிவெடுத்துவிட நினைக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala is in discussion with her relatives regarding the party disputes and assets. Tomorrow her parole is over and she has to return by evening.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற