9 மாதத்திலேயே பதவியை இழந்த பரிதாப சசிகலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  9 மாதத்திலேயே பதவியை இழந்த பரிதாப சசிகலா!-வீடியோ

  சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா அப்பதவியை 9 மாதத்திலேயே இழந்து விட்டார்.

  பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பொதுக் குழு கூட்டம் கூடியது. இதில் சசிகலா, தினகரன் நீக்கம் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

  டிடிவி தினகரன் சார்பில் இந்த பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் திருமண மண்டபத்தில் கூடியது.

  மவுன அஞ்சலி

  மவுன அஞ்சலி

  இதைத் தொடர்ந்து கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

  சசிகலா நீக்கம்

  சசிகலா நீக்கம்

  இதன் பின்னர் ஒவ்வொரு தீர்மானமாக வாசிக்கப்பட்ட நிலையில் பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு முன்புதான் இப்பதவியில் நியமிக்கப்பட்டார் சசிகலா.

  9 மாதத்திலேயே

  9 மாதத்திலேயே

  ஜெயலலிதா மறைந்ததும் இவரை தற்காலிகமாக பொதுச் செயலாளர் பதவியில் அமர வைத்தனர். ஆனால் ஓ.பி.எஸ். புரட்சி அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்புகளுக்கு இடையில் தற்போது அந்தப் பதவியை இழந்துள்ளார் சசிகலா.

  அடுத்து என்ன

  அடுத்து என்ன

  அடுத்து என்ன நடக்கும், சசிகலா தரப்பு என்ன செய்யப் போகிறது என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் அடிப்படையில்தான் இந்த நீக்கம் செல்லுமா, செல்லாதா என்பதும் உறுதியாகும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sasikala was sacked from ADMK General Secretary post by General council members.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற