For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: ஏப்.16க்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க உத்தரவு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் தமிழகத்தில் 24ம் தேதி நடைபெற உள்ளதால் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது நடந்து வரும் பிளஸ் 2 தேர்வு மார்ச் 25ஆம் தேதி முடிகிறது. இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடக்கிறது.

students

இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மீதமுள்ள 6,7,8,9, 11 ஆகிய வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 3 முதல் 16ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

அதேபோல், ஏப்ரல் 22ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் கடைசியில்தான் பள்ளித் தேர்வுகள் நிறைவுபெறும். தேர்தல் வாக்குப்பதிவையடுத்து இந்த ஆண்டு சில தினங்கள் முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள்

தேர்வு பணிகளும், தேர்தல் பணிகளும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வருவதால் ஆசியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கல்வித்துறை பணியாளர்கள்

ஆசிரியர்கள் மட்டுமல்லாது கல்வித்துறையில் உள்ள பிற அதிகாரிகளும், அலுவலக ஊழியர்கள் தேர்தல் பணியில்

ஈடுபடுத்தப்படுவார்கள். 10000 ஊழியர்கள் வரை தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தேர்தலுக்கான பயிற்சியும் அளிக்க வேண்டும்.

பேப்பர் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை அதற்குள் முடிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
With the Election Commission of India announcing Tamil Nadu polls to be held on April 24, teaching and non-teaching staff of the School Education Department will have a tough time this year, as they have first the examination duty and then the pressure filled election duty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X