தஞ்சை உள்ளிட்ட 4 தொகுதி தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி- சீமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவை நெல்லித்தோப்பு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று சென்னையில் அக்கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

Seeman to go it alone in By elections

முதல்வர் ஜெயலலிதா உடல்நலத்துடன் இருந்திருந்தால் காவிரி பிரச்சனையில் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் தற்போது இதை யார் கையில் எடுப்பது? என்பது குழப்பம் தான்.

தற்போதைய விவசாயிகள் பிரச்சினையை கருத்தில் கொள்ளாத பா.ஜ.க. அரசு, ஜல்லிக்கட்டு பற்றி பேசி கவனத்தை திசை திருப்ப பார்க்கிறது. இப்போது இதை பேசவேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 முறை கடிதம் எழுதியும், பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்தஆண்டும் நடக்கும் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Naam Thamizhar Katchi Seeman said that his party will contest in Aravakurichi, Thanjavur, Thirupparankundram and Nellithoppu elections and the would go it alone.
Please Wait while comments are loading...