பெரியகுளம் அருகே தலித்துகள் மீதான அடக்குமுறைகளை போலீஸ் உடனடியாக நிறுத்த வேண்டும்- சீமான்
சென்னை: பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் தலித்துகள் மீதான அடக்குமுறைகளை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிப்பட்டியில் அறிவாசான் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற ஆதித்தமிழ்குடிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதலை தடுக்கத் தவறியதோடு, பாதிக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிகள் மீதே தமிழ்நாடு காவல்துறை தொடர்ச்சியாக கொடுந்தாக்குதலை நிகழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

அமைதி வழியில் அண்ணல் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த தங்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் விதமாகவே ஒரு சிலர் எதிர்வினையாற்றினர். தமிழ்நாடு காவல்துறை அவ்வாறு எதிர்வினையாற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீதுகூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு காவல்துறை,

ஏதுமறியா ஆதித்தமிழ்க்குடி மக்களை வேட்டையாடுவது போல் ஒவ்வொரு நாளும் தேடித்தேடி கைது செய்து வருவது திமுக அரசின் அதிகார ஒடுக்குமுறையையே வெளிக்காட்டுகிறது. குரலற்ற எளிய மக்களின் குரல்வளையை நெரிப்பதற்கு பெயர்தான் திமுக அரசின் சமூகநீதி போற்றும் திராவிட மாடலா? அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிக்க சென்றதை தவிர அம்மக்கள் செய்த குற்றமென்ன? அதற்குகூட பாதுகாப்பளிக்க முடியாத திமுக அரசின் காவல்துறை, அவர்களை அச்சுறுத்தி அடக்கு ஒடுக்க நினைப்பது எவ்வகையில் நியாயமாகும்? ஆகவே, ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிடுவதோடு, கைது செய்துள்ளவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியாமல் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications