காலைத் தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு.. ஓப்பனாக கண்டித்த சீனியர் அமைச்சர்.. மேயர் செம அப்செட்! யாருங்க?
சென்னை : கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலேயே, மாநகராட்சி மேயரை பகிரங்கமாக கண்டித்துள்ளார் திமுகவின் சீனியர் அமைச்சர் ஒருவர். இதனால், மேயர் தரப்பு கடுமையாக அப்செட் ஆகியுள்ளதாம். இந்நிகழ்வு தான் மத்திய மாவட்ட திமுகவில் தற்பொது விவாதமாகியுள்ளது.
தமிழ்நாட்டின் மத்தியில் உள்ள முக்கியமான மாநகராட்சியின் மேயரை கட்சிக் கூட்டத்திலேயே பகிரங்கமாக கண்டித்துள்ளார் ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சீனியர் அமைச்சர். ஏற்கனவே அந்த நகரத்தில் கோஷ்டி மோதல்கள் கடுமையாகி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் மேயரை கடுமையாக விளாசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேயர் அந்த மூத்த அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர். எந்த அளவுக்கு என்றால், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலுக்கு போட்டியிடும்போதே இவர் தான் அடுத்த மேயர் அந்த அமைச்சராலேயே சொல்லப்பட்டவர். அந்த அளவுக்கு அமைச்சரின் நம்பிக்கையாக விளங்கியவர் மீது சில விஷயங்களால் அமைச்சர் அதிருப்தி அடைந்துவிட்டாராம்.

கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் என யாரையும் அனுசரித்துச் செல்வதில்லை என அமைச்சருக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றதால், சமீபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தின்போது சீறியிருக்கிறார் அமைச்சர்.
கட்சியினர் அனைவரும் பொறுப்பை உணர்ந்து களத்துல இறங்கி வேலை செய்யணும். மேயர் ஆகிட்டோம், சட்டமன்ற உறுப்பினர் ஆகிட்டோம்னு காலைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு சுத்தக்கூடாது, கட்சியில மாநகர செயலாளர் பொறுப்பிலயும் இருக்குற ஆளு எல்லா இடத்துக்கும் போகணும் வரணும் என காட்டமாகப் பேசியிருக்கிறார் அமைச்சர்.
இதனால், அங்கிருந்த மேயர் கடுமையாக அதிர்ச்சியடைந்து விட்டாராம். என்னதான் அதிருப்தி என்றாலும், கூப்பிட்டுச் சொன்னால் கேட்டுக்கொள்ளப் போகிறேன், கட்சி கூட்டத்தில் எல்லோரும் இருக்கும்போது இப்படி பேசினால் என் பதவிக்கு என்ன மரியாதை என தனக்கு நெருக்கமானவர்களிடம் பொறுமித் தள்ளியிருக்கிறாராம் மேயர்.












Click it and Unblock the Notifications