For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 3 மாணவிகள் உயிரிழப்பு: கல்லூரிகளுக்குள் பேருந்துகளை நிறுத்தி இறக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: தண்ணீர் லாரி மோதி சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து, கல்லூரி வளாகத்திற்குள் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

செல்லம்மாள் கல்லூரியில் படிக்கும் சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகிய 3 மாணவிகளும் நேற்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது, பரங்கிமலையில் இருந்து நீரை தேக்கிக் கொண்டு கிண்டி மேம்பாலத்தில் இருந்து இறங்கிய தண்ணீர் லாரி நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த 3 மாணவிகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் படுகாயம் அடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சாலை பாதுகாப்பு, நடந்து செல்வோரின் பாதுகாப்பு, பேருந்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், கல்லூரிகளுக்குள் பேருந்துகள் சென்று மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:

மாணவிகளின் மரணம் பெரும் துயரம்

மாணவிகளின் மரணம் பெரும் துயரம்

சென்னை கிண்டி அருகில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகியோர் மீது தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு பெருந்துயரமுற்றேன். அந்த மாணவிகள் சாலையைத் கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, இந்த பயங்கரமான விபத்தை ஏற்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

எதிர்காலக் கனவுகளுடன் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவிகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. இப்படியொரு விபத்தில் இளம் வயது மாணவிகளை பறிகொடுத்திருக்கும் பெற்றோரையும், உறவினர்களையும் நிலை குலைய வைத்திருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவிகளின் குடும்பத்திற்கும், சக மாணவிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும்

மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும்

இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து அவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர்கள் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும், அதற்குரிய தரமான சிகிச்சையை அரசே முன் வந்து செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கல்லூரி வளாகத்திற்குள் பேருந்து நிறுத்தம் வேண்டும்

கல்லூரி வளாகத்திற்குள் பேருந்து நிறுத்தம் வேண்டும்

சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் லாரிகள் கட்டுப்பாடற்று இயக்கப்படுகின்றன. இது சாலைகளில் நடப்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரது உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கல்லூரி வளாகத்திற்குள் மாநகர பேருந்துகள் வந்து நிற்காத காரணத்தால் மாணவிகள் வெகு தொலைவில் இறங்கி நடந்து வர வேண்டியிருக்கிறது என்றும், அப்படி நடந்து வரும் சாலை குறுகியதாக இருப்பதால் இது போன்ற விபத்துகள் நேரிடுகிறது என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்களும், செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்."கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பேருந்துகள் வந்து மாணவிகளை இறக்கி விட வேண்டும்" என்று நீண்ட நாட்களாக மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைத்து வருவதாகவும், அக்கோரிக்கையை மாநகரப் போக்குவரத்துக் கழகம் கண்டு கொள்ளவில்லை என்றும் மாணவிகள் புகார் கூறியிருக்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று விபத்து நிகழ்ந்தவுடன் செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளே மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்

பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்

சாலைகளில் நடப்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் சாலையை கடந்து செல்வோரின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக இது போன்று கல்லூரிகள், பள்ளிகள் இருக்கும் இடங்களில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இறங்கி கல்லூரிக்குள்ளும், பள்ளிகளுக்குள்ளும் செல்வதற்கு வசதியாக பேருந்து நிறுத்தங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு இருக்கிறது. ஆகவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சென்னை மாநகர போக்குவரத்து போலீஸாரும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும் இணைந்து இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
After death 3 student of Chellammal collage, M.K. Stalin demanded on his Facebook page to set up bus stop in college campus for student’s safety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X