எடப்பாடி உட்பட யாராக இருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை: தினகரன் வார்னிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட யாரராக இருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை, அவரது நியமனம் செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி இன்று அதிரடி தீர்மானம் நிறைவேற்றியது. இது தினகரன் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனக்குதான் அதிகாரம்

எனக்குதான் அதிகாரம்

துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டவன் நான். தற்போது பொதுச்செயலருக்கு உள்ள அதிகாரங்களுடன் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு.

பதவியில் ஒட்டிக்கொள்ள...

பதவியில் ஒட்டிக்கொள்ள...

பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டிருந்தால் போதும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். பதவியை காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி இதுபோன்ற செயலில் இறங்கியிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தில்...

தேர்தல் ஆணையத்தில்...

தேர்தல் ஆணையத்தில் துணை பொதுச்செயலராக என்னை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அதற்கான ஆதாரத்தை உங்களிடம் தருகிறேன்.

மடியில் கனம்

மடியில் கனம்

திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செல்லும் எனில் எனது நியமனமும் செல்லும். மடியில் கனத்துடன் இருப்பதால் அச்சத்தால் இப்படி செயல்படுகின்றனர்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran has warned that severe action will be taken if anyone, including the Chief Minister Edappadi Palanisami who is acting against the party. He said that he has the power to appoint and remove new responsibility.
Please Wait while comments are loading...