ஆபாசப் பட சிவராஜின் நாய் கடித்து 3 பேர் படுகாயம்.. பாலக்கோட்டில் இன்னொரு பரபரப்பு!
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில், பெண்களை தவறாகப் பயன்படுத்தி அதை வீடியோவில் படமாக்கி சிக்கி கைதாகி சிறைக்குப் போயுள்ள நிதி நிறுவன அதிபர் சிவராஜ், வளர்த்து வந்த நாய் கடித்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பாலக்கோட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த சிவராஜ், தனது நிதி நிறுவனத்தில் வட்டிக்குக் கடன் வாங்கிய பெண்களை குறி வைத்து வேட்டையாடி வந்தார். அவர்களை தனது பண்ணை இல்லத்திற்குக் கூட்டிச் சென்று உல்லாசமாக இருந்து அதை வீடியோவிலும் பதிவு செய்து தனது செல்போனில் வைத்திருந்தார்.
இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவரது தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து தற்போது 3 நாள் பரோலில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குப்பன் கொட்டாய் கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஒரு உயர் ரக நாயை வளர்த்து வந்தார் சிவராஜ். அந்த நாயை சிலர் அவிழ்த்து விட்டு விட்டனர் போலும். இதனால் வெளியில் வந்த நாய் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 80 வயது பாட்டி காவேரியம்மாளை கடுமையாக கடித்துக் குதறி விட்டது. அவரைக் காப்பாற்ற ஓடி வந்த மகள் பழனியம்மாளையும் நாய் கடித்தது. மேலும், பழனி என்பவரையும் கடித்தது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிவராஜால் பட்ட பாடு போதாது என்று அவரது நாய் வேறு 3 பேரைக் கடித்து விட்டதால் ஊரெங்கும் பரபரப்பாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications