முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் கட்டுவிரியன் பாம்பு.. தூய்மை பணியாளரை கடித்ததால் பரபரப்பு!
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடை அருகே கட்டுவிரியன் பாம்பு சீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, நேற்று திருநெல்வேலி வந்த ஸ்டாலின், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிலையில், இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.694 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் பல்வேறு நிறங்களால் ஆன ரோஜா உள்ளிட்ட பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, விழா மேடையில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு, தூய்மை பணியாளர் கண்ணன் என்பவரை கையில் கடித்தது. வலியால் துடித்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பாம்பு கடித்ததால் கையில் அவருக்கு அதிக வீக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா மேடையில் பாம்பு வந்தது எப்படி? விழா ஒருங்கிணைப்பாளர்களின் கவனக்குறைவால் இது நடந்ததா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழா மேடைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாம்பு கண்டறியப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications