அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை - அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாத்தூர்: தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சாத்தூர் அருகே உள்ள கே.வி.எஸ். பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வித் திருவிழா நடைபெற்றது. இதற்கு நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார். த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்.எஸ்.வி. சித்தன் விழாவை தொடங்கி வைத்தார்.

Smart classrooms in government schools, says K A Senkottaiyan

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது, ஆண்டுதோறும் தமிழ்வழி கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள், மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு விருதுடன், ரூ. 10 ஆயிரமும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவ-மாணவிகளுக்கு விருதுடன் ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1 கோடியே 32 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. 54 ஆயிரம் கேள்விகள் கொண்ட பயிற்சி புத்தகம் தயாரிக்கப்படுகிறது.

இதன் மூலம் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் எந்த போட்டித் தேர்விலும் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister K A Senkottaiyan said that the department is going to introduce smart classrooms. Following the GO, we will float tenders for the preparation of smart classrooms.Around 3,000 smart classrooms will be set up.
Please Wait while comments are loading...