ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு குணமான குட்டிப் பாப்பா இருந்தா எப்படி இருக்கும்?
Recommended Video

சென்னை: குணமா வாய்ல சொல்லனும்.. இந்த ஒத்த வார்த்தையால் உலகப் புகழ் பெற்று விட்டார் ஸ்மித்திகா.
திருப்பூரைச் சேர்ந்தவர் ஸ்மித்திகா. இவரது தாயார் பிரவீணா. தகப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா போல, தாயாருக்கு பாடம் கற்பித்து புகழ் பெற்று விட்டார் ஸ்மித்திகா. யார் இந்த சுட்டிப் பாப்பா என்று அத்தனை பேரும் அசந்து போய் விட்டனர்.
இதுகுறித்து ஸ்மித்திகாவின் தாய் பிரவீணா கூறுகையில், ஸ்மித்திகா சுட்டிப் பெண். ரொம்ப மெசூர்டா இருப்பாள். எங்களுக்கே அவதான் அட்வைஸ் செய்வாள். எமோஷனல் டைப்பும் கூட. உடனே அழுதுடுவாள். சில நேரங்களில் அவள் செய்யும் சுட்டித்தனங்களை செல்போனில் வீடியோவாக எடுத்து அவளது அப்பாவிடம் காட்டுவேன்.

அட்வைஸ் செய்தாள்
பள்ளிக்கு கொடுத்தனுப்பிய சிற்றுண்டியை சாப்பிடாமல் அவள் அப்படியே கொண்டு வந்திருந்தாள். அதபத்திதான் நான் அவள்கிட்ட கேட்டேன். அதுக்கு ஒரே அழுகை, பதில் சொல்லாம சும்மா அழுதுகிட்டே இருக்கியேனு சும்மா லேசாதான் அடிச்சேன். அதுக்குதான் குணமா வாய்ல சொல்லனும்னு எனக்கே அட்வைஸ் செய்ய ஆரம்பிச்சிட்டா.
ஊத்துக்குளி மாவட்டம்
தப்பு பண்ணா அடிக்காம குணமா வாய்ல சொல்லனும்ன்ற வீடியோவை என்னோட நண்பர் ஒருவர்தான் பேஸ்புக் பக்கத்தில் போட்டார். அதுக்கப்பறம்தான் ஸ்மித்திகா செய்த சேட்டை எல்லாருக்கும் தெரிந்தது. எங்க ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி மாவட்டத்தில் இருக்கும் மண்ணறை.

டெய்லராக உள்ளார்
ஸ்மித்திகாவின் அப்பா ஆட்டோ டிரைவராக உள்ளார். நான் பனியன் கம்பெனியில் டெய்லராக உள்ளேன். ஸ்மித்திகா யூகேஜி படிக்கிறாள். வீட்டில் இருப்பது போன்றே பள்ளியிலும் சுட்டிதான். அவங்க மிஸ்ஸையும் அவள் ஆன்ட்டினுதான் கூப்பிடுவா.

தோசை கிடைக்காட்டி அவ்ளோதான்
தினமும் பள்ளியில் நடப்பதை ஒரு மணி நேரமாவது என்னிடம் பேசி கொண்டே இருப்பாள். ஆனால் எனக்குதான் நேரமே கிடைப்பதில்லை. அவளுக்கு தோசை என்றால் ரொம்ப பிடிக்கும். அது மட்டும் கேட்ட நேரத்துக்கு செய்து தரலைன்னா ரணகளம் பண்ணிடுவாள்.

சந்தோஷமாக உள்ளது
அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் ஸ்மித்திகா நன்றாக பழகுவாள். பொது அறிவு கேள்விகள் நன்றாக தெரியும். திருக்குறள் கேட்டால் படபடன்னு சொல்லிடுவா. வீட்டில் அவள் எதார்த்தமா செய்ற சேட்டைதான் இப்போ வைரல் ஆகிவிட்டது. அந்த வீடியோவை பார்த்துவிட்டு ஸ்மித்திகாவுக்கு போன் செய்து வெளிநாட்டில் இருந்துகூட அன்பா பேசினாங்க. இது மனதிற்கு சந்தோஷத்தை அளித்தது என்றார் பிரவீணா.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications