பொங்கல் பண்டிகை கொண்டாட ஊருக்கு போறீங்களா?- சுவீதா சிறப்பு ரயில்கள் இயக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 11,12,13 தேதிகளில் இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.

அதே போல மறு மார்க்கத்தில் ஜனவரி 15,16,17ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி , சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள்.

பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் கொண்டாட்டம்

பெரும்பாலோனோர் பயணத்திற்காக ரயில்களை தேர்வு செய்வார்கள். 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருப்பதால் , ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு செப்டம்பர் 15ஆம் தேதியே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

ரயில்கள் இயக்கம்

ரயில்கள் இயக்கம்

சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன், சிறப்பு ரயில், வைகை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதே போல ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களுக்கும் பல ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் அதிருப்தி

பயணிகள் அதிருப்தி

எனினும் டிக்கெட்டுக்கள் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே முடிந்து விட்டதால் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் அதிக கட்டணம் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூடுதல் கட்டண ரயில்கள்

கூடுதல் கட்டண ரயில்கள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 11,12,13 தேதிகளில் இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.
அதே போல மறு மார்க்கத்தில் ஜனவரி 15,16,17ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் ரிசர்வேசன் இன்று முதல் தொடங்குகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Southern Railway will operate Suvidha special trains between Chennai and Tirunelveli a for Pongal festivals to clear the extra rush of traffic.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற