For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுமியா அன்புமணிக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.. அன்புமணி திட்டவட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: எனது மனைவி சவுமியா அன்புமணிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதன் மூலம் சவுமியா அன்புமணி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசுகையில் சட்டசபைத் தேர்தலில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றார் அன்புமணி.

Sowmiya Anbumani has no business with Politics, says Anbumani

தொடர்ந்து அவர் பேசுகையில், மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, மழை காரணமல்ல என்று கூறப்பட்டுள்ளது. அது முற்றிலும் உண்மை. சென்னையை தவிர மற்ற பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பு இயற்கை. ஆனால் சென்னையில் ஏற்பட்டது செயற்கை.

57 நாட்களுக்கு முன்பாகவே பி.பி.சி. உள்பட சில அமைப்புகள் மழை குறித்து முன் எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனால் தமிழக அரசு எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பருவமழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, அது குறித்து நீதி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்தது என்று திருமாவளவன் கூறியிருப்பது சரியானது அல்ல. 2006ம் ஆண்டில் இயற்கை மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டது. 2008ம் ஆண்டில் எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரிக்கு திமு. அரசு அனுமதி அளித்தது.

உண்மை அப்படியிருக்க திருமாவளவன் ஏன் திமுகவை விமர்சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் விஜயகாந்த் மற்றும் இளங்கோவனும் திமுகவை விமர்சிக்காதது ஏன்? அக்கட்சியுடன் அவர்கள், கூட்டணி அமைக்க போகிறார்களா.

English summary
PMK leader Dr Anbumani has said that his wife Sowmiya Anbumani has no business with Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X