வாழ்வாதாரத்துக்காக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்களாம்.. சொல்வது தமிழிசை சவுந்தரராஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்கள் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இலங்கையை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று சென்னையில் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், " தமிழக மீனவர்களை அதிகமாக பாதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்." என்று கூறினார்.

Sri Lankan govt should withdraw their new law against Tamilnadu Fishermen, Tamilisai urges

மேலும் அவர் கூறுகையில், எதிர்காலத்தில், பெட்ரோல் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பொதுமக்கள் அதிக வரி செலுத்தி பெட்ரோல் டீசல் வாங்குவது தடுக்கப்படும் என்றும் தமிழிசை கூறினார்.

"தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக எல்லை தாண்டுகிறார்கள். அதற்காக கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தை இலங்கை வாபஸ் பெறவேண்டும்" என்றும் தமிழிசை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 6ம் தேதி இலங்கை அரசு, ' எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையிலான மசோதாவை ' அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தாலோ, தடை செய்யப்பட்ட இருமடி வலைகளை கொண்டு மீன்பிடித்தாலோ ரூ.2 முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே திமுக செயல் தலைவர், தமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் கருப்பு சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sri Lankan govt should withdraw their new law against Tamilnadu Fishermen, BJP state leader Tamilisai Soundararajan urges.
Please Wait while comments are loading...