திமுக தலைவராக முடியாத ஸ்டாலினால் முதல்வராகவும் முடியாது... எடப்பாடியின் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டாலினால் திமுக தலைவர் பதவிக்கே வரமுடியவில்லை. எங்கிருந்து தமிழகத்தில் முதல்வராக முடியும் என்று அதிமுக குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதனால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

குறுக்கு வழியில் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஸ்டாலின் மீது குற்றம்சாட்டினர். இந்நிலையில் இன்று அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடியது.

முதல் வெற்றி

முதல் வெற்றி

அதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, நடைபெறாது என்று சிலர் நினைத்துக்கொண்டிருந்த பொதுக்குழு தொண்டர்கள் ஆதரவால் நடைபெற்றுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

வரலாறு இல்லை

வரலாறு இல்லை

அதிமுக அணிகள் இணைந்ததன் மூலம் நாம் புதிய வரலாறு படைந்துள்ளோம். தமிழகத்தில் பிரிந்த கட்சிகள் ஒன்றிணைந்ததாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை அதிமுக உடைத்துள்ளது. திமுகவின் தலைவராக கூட ஸ்டாலினால் முடியவில்லை. இந்நிலையில் அவர் தமிழகத்தின் முதல்வராக எப்படி முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

பெரும்பான்மை நிரூபிக்கட்டும்

பெரும்பான்மை நிரூபிக்கட்டும்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டாலின் கூறுகையில், முதலில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து விட்டு பிறகு என்னைப்பற்றி விமர்சனம் செய்யட்டும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Working President MK Stalin cannot become President of DMK, then how can he will be CM of Tamilnadu, Edappadi Palanisamy says in ADMK General council meeting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற