சாதாரண வார்டுக்கு மாறிய ஜெ.விடம் ‘இதை’ப் பற்றிக் கேளுங்கள்...: ஸ்டாலின் சுளீர் பதில்
விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருவது குறித்தும், அவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது குறித்தும் முதல்வர் ஜெயலலிதா தான் பதிலளிக்க வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருவது குறித்தும், அவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது குறித்தும் முதல்வர் ஜெயலலிதா அல்லது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேளுங்கள் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், சென்னை அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், மக்கள் அவதிப்படுவது குறித்தும், அது தொடர்பாக திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "தலைவர் கருணாநிதி, ரூபாய் நோட்டுகள் இல்லாமல் தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருக்கிறார். நானும் திமுக இளைஞரணி சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். அதில், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் 24-ம் தேதி, மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் திமுக இளைஞரணியினர் பெருந்திரளாக பங்கேற்று, அந்த போராட்ட வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறேன்.
அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும், கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்" என்றார்.
அதனைத் தொடர்ந்து, 'நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.,க்கள் ஜல்லிக்கட்டு விவகாரம், 500, 1000 ரூபாய் நோட்டுகள் விவகாரம், காவேரி விவகாரம் ஆகிய 3 பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். திமுக சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "திமுகவும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும். காவேரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஏற்கனவே திமுக குரல் கொடுத்து வருகிறது. மீண்டும் மீண்டும் குரல் கொடுக்கும்" என்றார்.
தமிழக விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கவில்லையே ? என்ற கேள்விக்கு, 'தமிழக முதல்வரை ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றி விட்டதாக செய்தி வந்துள்ளது. அதனால் முதலமைச்சரை பத்திரிகையாளர்கள் முடிந்தால் சென்று சந்தித்து இதுபற்றி கேளுங்கள். அப்படி இல்லை எனில் முதலமைச்சரின் இலாகாக்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து கேட்க வேண்டிய கேள்வி இது. அப்படியும் இல்லையென்றால் தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவரையாவது கேட்டு செய்தி வெளியிட வேண்டும். அப்படியாவது விவசாயிகளுக்கு பயன் கிடைக்கட்டும்' என ஸ்டாலின் பதில் அளித்தார்.
மேலும், ஓ.பன்னீர் செல்வத்திடம் முதல்வரின் பொறுப்புகள் வந்த பிறகு அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "முதல்வர் ஜெயலலிதாவிடம் அந்த பொறுப்புகள் இருந்தபோதே தமிழக அரசு செயல்படவில்லை. இப்போது அந்த பொறுப்புகள் ஓ.பி.எஸ்க்கு வந்த பிறகும் செயல்படவில்லை. அதனால் தான் அரசு முடங்கி போயுள்ளது என தொடர்ந்து சொல்லி வருகிறோம்" என்றார்.
-
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்!












Click it and Unblock the Notifications