தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்கப் போகிறீர்கள்?: சட்டசபையில் ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கே அமைக்கப் போகிறீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் விரையில் எய்ம்ஸ் மருத்துவமன அமைக்கப்படும் என்றார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் விவாதத்தின் போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்கப் போகிறீர்கள் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Stalin questioned where the AIIMS hospital is going to be set up in Tamil Nadu

மேலும் தமிழக அரசே இடத்தை முடிவு செய்யும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவமனை தஞ்சையிலா அல்லது மதுரையில் அமைப்பதா என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார் என்பதையும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மத்திய அரசு கோரியுள்ள விவரங்கள் குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பல மாநிலங்கள் கோரியிருந்த நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய உள்ளது நமது முதல் வெற்றி என்றும் சட்டசபையில் விஜயபாஸ்கர் கூறினார். ஆனால் எய்ம்ஸ் மதுரையில் அமைக்கப்பட உள்ளதா அல்லது தஞ்சையிலா என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Opposition leader Stalin questioned where the AIIMS hospital is going to be set up in Tamil Nadu. Responding to this, Minister Vijayapaskar said the AIIMS hospital would be set up in Tamil Nadu.
Please Wait while comments are loading...